குஷியில் கடற்கரை பிரியர்கள்.. சுற்றுலாத்துறை அமைச்சர் சொன்ன ஹாப்பி நியூஸ்!!

0

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவில் விரைவில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

படகு சவாரி:

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சில நாட்களுக்கு தொடங்கி முதல்வர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.  இதில் தினமும் சபை சார்ந்த உறுப்பினர்களின் கேள்விகளும்,  துறை சார்ந்த அமைச்சர்களின் பதில்களும் இடம்பெற்று வருகிறது.  மேலும், நேற்று 75 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலீதின் பைகள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவிப்புகள் இடம் பெற்றது.

இன்றைக்கு சுற்றுலா துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றது.  இதற்கு விளக்கம் தந்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், சென்னை மெரினாவில் உள்ள கடற்கரையில் படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்தார்.  இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மலை பிரதேசங்களான ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைகளில் உள்ள காப்பி மற்றும் தேயிலை தோட்டங்களை பயணிகள் சுற்றிப்பார்க்கும் வகையில் தயார் செய்யப்படும். இதுமட்டுமில்லாமல், சுற்றுலாத்துறை சார்ந்த அனைத்து மேம்பாட்டு வசதிகள் செய்யப்படும் என உறுதியளித்தார். கிராமிய மற்றும் மலைத்தோட்ட சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கூடிய வகையில் “சுற்றுலா விருது” வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here