சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் – கழிவு நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி!!

0
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் கோடம்பாக்கம் நெடுசாலையில் நீர் தேங்கி குழி இருந்தது தெரியாமல் அதில் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் மரணம் அடைந்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சிதைந்த சாலைகளை சீரமைக்காமல் இருந்த மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கே இது போன்ற மரணங்கள் நிகழ காரணமாக இருக்கின்றது என்று பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குண்டும் குழியுமான சாலை:

சென்னையில் பல இடங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் புயல் காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் சேதம் அடைந்து வருகின்றது. பல இடங்களில் கழிவு நீர் வெளியேறி சாலைகளில் குழி உள்ளது தெரியாதவாறு மறைந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் தான் அதிக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர், நரசிம்மன். அவர் இன்று அதிகாலை பணிக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் கோட்டம்பக்கம் மேம்பாலத்தில் பயணித்துள்ளார். அப்போது சாலையில் ஒரு இடத்தில் மழை நீர் தேங்கி சாலையில் குழி மறைந்துள்ளது. அதே போல் பாதாள சாக்கடை பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிகாலையில் இதனை கவனிக்காத நரசிம்மன் வண்டியில் சென்று அந்த குழியில் விழுந்து நிலை தடுமாறியுள்ளார். அவர் கீழே விழுந்ததை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க விரைந்துள்ளனர்.

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவருக்கு தெரிவித்து விட்டனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் இது போன்று தான் சாலைகள் கூறுகின்றனர். அதே போல் இதனை சென்னை மாநகராட்சி முறையாக பராம்பரிக்கவில்லை என்ற குற்றசாட்டினையும் வைத்துள்ளனர். மாநகராட்சியின் அலட்சியத்தால் இது போன்ற சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்பது சுட்டி காட்டப்பட வேண்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here