சென்னையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

0

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூலை 31 வரை ஊரடங்கு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு மக்களை பாதுகாக்க தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமலில் இருந்தது.

இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்தது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முன்பு இருந்தவாறு கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் ஜூலை 5ம் தேதி அமலில் இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு இருந்தார். தற்போது இந்த பொது முடக்கம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிப்பு..!

EPS
EPS
  • காய்கறி கடைகள் மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படும்.
  • வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.
  • தேநீர் கடைகள் (பார்சல் சேவை மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
  • சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
  • தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
  • அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் இடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here