சென்னை கோயம்பேடு வரை மீண்டும் ஆம்னி பேருந்து சேவை., ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
சென்னை கோயம்பேடு வரை மீண்டும் ஆம்னி பேருந்து சேவை., ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!!

சென்னையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால், ஆம்னி பேருந்துகள் கோயம்பேடுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என மாநில அரசு அறிவுறுத்தியது. ஆனால் முடிச்சூரில் ஆம்னி பேருந்து பணிமனை தயாராகி வருவதால், பழைய கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமணிக்கே தனியார் பேருந்துகள் செல்ல வேண்டியுள்ளது. எனவே அதுவரையிலும் கோயம்பேடு வரை பயணிகளுக்கு ஏற்றி இறக்க அனுமதி வழங்க வேண்டும் என ஆம்னி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, முடிச்சூர் ஆம்னி பேருந்து பணிமனை தயாராகும் வரை தனியார் பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். மேலும் போரூா் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம்.” என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அட்ரா சக்க., முதல் நாளில் ரஜினியின் லால் சலாம் படம் செய்த வசூல் இத்தனை கோடியா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here