உலகளவில் கொரோனா வைரஸ் பரவலில் சென்னை 2ம் இடம்..!

0

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நகரங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக சென்னை நகரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா..!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. சென்னையில் கடந்த மார்ச் 9ல் கொரோனா தொற்று கடுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடக்கியுள்ளது. ஜூன் 30ம் தேதி சென்னையில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதே நாளில் டில்லியில் 2,199 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

தற்போது சென்னையில் தான் கொரோனா பரவல் அதிக வேகமாக உள்ளது. ஜூன் 30ம் தேதி இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரமாக சென்னை மாறியது. சென்னைக்கு அடுத்தபடியாக டில்லி, தானே, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கவுகாத்தி பால்கர், மற்றும் ராய்காட் நகரங்கள் உள்ளன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

உலகளவில் சென்னை 2ம் இடம்..!

உலகளவில் லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை, சாண்டியாகோ, டில்லி, சா பாலோ, தானே, மியாமி, பியூனஸ் அயர்ஸ், சல்வாடர், லிமா ஆகிய நகரங்கள் கொரோனா அதிகம் பரவும் நகரங்களாக உள்ளன.

சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனா சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்றுஎண்ணிக் கையும் அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா அதிகம் பரவும் நகரமாக மும்பை இருந்தது. ஜூன் மாதத்தில் டில்லி கொரோனா அதிகம் பரவும் நகரமானது. தற்போது சென்னை, டில்லியை முந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here