
சென்னை புறநகரில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம், வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு :
நாடு முழுவதும் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில், சுங்க சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில், இந்த சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன்படி சென்னை செல்லும் ஆந்திரா, கர்நாடகா, மதுரை மற்றும் கோவை ஆகிய வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இது மட்டும் இல்லாமல் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
வடக்கன்ஸ்க்கு ஆதரவாக, தமிழரை தாழ்த்தி பேசிய அனிதா குப்புசாமி? இதெல்லாம் உங்களுக்கு தேவையா?
இதற்கான மாற்றி அமைக்கப்பட்ட கட்டண விதிகள் அனைத்தும், மார்ச் 31 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என பார்க்கப்படுகிறது. இந்த புதிய கட்டண விதிகள் அனைத்தும், வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது கருத்து தெரிவித்து வருகின்றனர்.