நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இந்த கல்லூரி முதலிடமாம்!!

0
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு - தமிழகத்தில் இந்த கல்லூரி முதலிடமாம்!!
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு - தமிழகத்தில் இந்த கல்லூரி முதலிடமாம்!!

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி மூன்று ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட்டியல் வெளியீடு:

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மற்ற கல்வி நிறுவனங்கள் தங்கள் தரத்தை உயர்த்தி கொள்ள ஆண்டுதோறும் நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசின் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு கல்வி நிறுவனங்களின் கற்றல் திறன், ஆய்வக வசதி, மாணவர்களின் கல்வி நிலை உள்ளிட்ட 11 அம்சங்களை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு - தமிழகத்தில் இந்த கல்லூரி முதலிடமாம்!!
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இந்த கல்லூரி முதலிடமாம்!!

தற்போது இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இதில் நாட்டில் சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 3 முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி. 2-வது இடத்திலும், மும்பை ஐ.ஐ.டி. 3-வது இடத்திலும் உள்ளன. இது மட்டுமல்லாமல், சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்திலும், சண்டிகரின் PGIMER கல்லூரி இரண்டாவது இடத்தையும், வேலூர் சி.எம்.சி. 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு - தமிழகத்தில் இந்த கல்லூரி முதலிடமாம்!!
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இந்த கல்லூரி முதலிடமாம்!!

இதனை அடுத்து, சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான ஆய்வு பிரிவில் முதலிடத்தை ஐஐஎஸ்சி பெங்களுரும், இரண்டாம் இடத்தை சென்னை ஐஐடியும், மூன்றாம் இடத்தை மும்பை ஐஐடியும் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த கல்லூரிகளில் டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்திலும், எல்.எஸ்.ஆர். பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்திலும், சென்னை லயோலா கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளது கவனிக்க தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here