Thursday, April 25, 2024

“தவணை முறையில் கல்லூரி கட்டணத்தை செலுத்தலாம்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

Must Read

தனியார் மருத்துவ கல்லூரிகள் கல்வி கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா நோய் பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணம் குறித்து காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மாணவர்களின் பெற்றோர், எம்.ஷேக் தாவூத் உள்ளிட்ட, எட்டு பேர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில், பொது முடக்கம் காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வருகின்றனர். அப்படி கற்று கொண்டாலும் நேரடி வகுப்புகளில் கற்று கொண்டது போல் இருக்காது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், இதற்காக கல்லூரி நிர்வாகம் 22.50 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். இதனால் இந்த ஆண்டு 40 சதவீத கல்வி கட்டணத்தை குறைத்து கொள்ளவும், மீதி உள்ள 60 சதவீத கட்டணத்தை இரண்டு தவணைகளாக வசூலிக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறாக கோரியிருந்தனர். இதனை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆனந்த் பிரஷாந்த் கொண்ட அமர்வு விசாரித்தது. பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவானது, நேரடியாக பாடங்கள் எடுக்கப்படவில்லை என்றாலும், பாரம்பரிப்பு மற்றும் இதர வசதிகளை கல்லூரி நிர்வாகம் செய்தாக வேண்டும்.

நீதிபதி தீர்ப்பு:

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் கல்வி கட்டணத்தை குறைந்து கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் கட்டணத்தை குறைக்க வாய்ப்புகள் இல்லை. கல்வி கட்டணத்தை 0 சதவீதம்; இரண்டாவதாக, 30 சதவீதம்; மூன்றாவதாக, 30 சதவீதம் என்று தவணை விகிதத்தில் வசூலிக்கலாம்.

செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்!!!

கூடுதலாக முழு கட்டணத்தையும் செலுத்த முடியும் என்பவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவணையாக செலுத்த விரும்புவார்கள் முதல் தவணையை 15 ஆம் தேதியும், இரண்டாவது தவணையையும் ஜனவரி 4 ஆம் தேதியும், கடைசி கட்டணத்தை பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். இந்த நாட்கள் நீடிக்கப்படாது” இவ்வாறாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -