சட்ட பேரவையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் – உயர்நீதிமன்றம் கருத்து!!

0
chennai hc
chennai hc

சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகரான இடத்தியினை பெண்களுக்கும் வழங்கிட அரசு தான் சட்டம் இயற்றிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, இது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைவரும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கு என்று தனியாக அனைத்து இடங்களிலும், துறைகளிலும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், அரசியலை பொறுத்தவரை பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற கருத்து பேசப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து “மனிதி” என்ற அமைப்பினை சேர்ந்த முத்துச்செல்வி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தார்.

புடவையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த அனிகா – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “சட்டமன்றத்தில் ஆண்களுக்கு நிகரான இடம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்படுவதும் இல்லை. சட்டமன்றத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே உள்ளனர். சட்டமன்றத்தில் சமபாலினத்தை நிறுவ மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” இவ்வாறாக மனுவில் கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Covid-19 Outbreak: Madras High Court Postpones Summer Vacation

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்று விசாரித்தார். அவர் தெரிவித்தாவது “பெண்களுக்கு சட்டப்பேரவையில் ஆண்களுக்கு நிகரான இடத்தினை வழங்க மத்திய அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்” இவ்வாறாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here