செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவு மறுப்பு… சென்னை உயர்நிதிமன்றம் திட்டவட்டம்!!!

0

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டிருப்பதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், மத்திய அரசிடம் இருந்து போதிய தடுப்பூசி கிடைக்காததால் தமிழக அரசு தற்போது சிரமத்தில் உள்ளது.

 

செங்கல்பட்டு ஹெச்எல்எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தை குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கடந்த 24 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வும் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும்படி உத்தரவிட முடியாது என்று  மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here