Friday, April 19, 2024

அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம் – விசாரணைக்கு ஏற்க மறுப்பு!!

Must Read

தமிழக அரசு சார்பில் பா.ஜ கட்சியினை சேர்ந்த சுப்ரமணிய சாமி உட்பட 4 பேர் மீது 9  அவதூறு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வழக்கு:

தமிழக அரசு பா.ஜ கட்சியினை சேர்ந்த சுப்ரமணிய சாமி, திமுக எம்எல்ஏ செந்திபாலாஜி, செல்வகணபதி மற்றும் திமுக எம்எல்ஏ மைதீன்கான் மீது அவதூறு வழக்குகளை தொடர்ந்தது. இவர்கள் நால்வர் மீதும் மொத்தமாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று வழக்கிற்கான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீதிமன்றம் சார்பில் கூறப்பட்டதாவது, “தனிப்பட்ட முறையில் ஒருவர் மாநிலத்தின் முதல்வரை தாக்கி பேசினால் அதனை அவதூறு வழக்காக ஏற்று கொள்ள இயலாது. அதே போல் தனிப்பட்ட அரசியல் சம்பந்தமான விமர்சனங்களையும் அவதூறு வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன”

2020 ஆண்டின் சிறந்த நபர்கள் ஜோ பிடன் & கமலா ஹாரிஸ் – “டைம்” இதழ் தேர்வு!!

“திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீதான அவதூறு வழக்குகள் நாளை விசாரிக்கப்படவுள்ளது. இப்படி தனிப்பட்ட விமர்சனங்களை வழக்காக கொண்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -