Friday, April 19, 2024

மிரட்டியதால் தேசிய தலைவர் புகாரை வாபஸ் வாங்கிய பெண்!!

Must Read

அகில பாரதிய வித்யார்த்த பரிஷாதின் தேசிய தலைவர் மற்றும் அரசு மருத்துவருமான சுப்பையா சண்முகத்திற்கு எதிராக கொடுக்க பட்ட புகார் திரும்பி பெறப்பட்டது.

புகார் வாபஸ்

புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையின் தலைமை மருத்துவரான சுப்பையா சண்முகம் மற்றும் ஒரு சென்னை பெண்ணின் குடும்பத்திற்கும் ஒரே அபார்ட்மெண்டில் வாழும் போது, வாகனம் நிறுத்தம் காரணமாக சிறு தகராறு எழுந்துள்ளது.

அப்படியா?? ⇒⇒5 நிமிடங்களில் 50 % சார்ஜ்!! குவல்காம்மின் குயிக் சார்ஜ் 5

அதனையடுத்து, சென்னை பெண்ணின் குடும்பம் தங்களை துன்புறுத்தியதாக அம்மருத்துவர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அதே அபார்ட்மெண்டில் வாழும் மக்களின் அழுத்தத்தினால் அப்பெண்ணின் குடும்பம் தங்களது புகாரை திரும்ப பெற்று கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவரின் துன்புறுத்தல்கள்

புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையின் தலைமை மருத்துவரான சுப்பையா சண்முகம் மீது, தனது வாகன நிறுத்த பகுதியில் அனுமதியின்றி வாகனம் நிறுத்தியதற்காக கட்டணம் கேட்ட 62 வயது பெண்ணை துன்புறுத்தியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் அப்பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாகவும், குப்பைகள் மற்றும் பயன்படுத்திய முகக்கவசத்தை வீட்டில் தூக்கி எரிந்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு நடந்ததற்கான சாட்சியாக அங்கு இருந்த CCTV காட்சிகளையும் சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாபஸ் பெற அழுத்தங்கள்

மேலும், புகாரை திரும்பி பெற்று கொள்ளுமாறு அபார்ட்மெண்டில் வாழும் அனைவரும் வலியுறுத்தியதாலே, புகாரை திரும்பி பெற்று கொண்டதாகவும், CCTV காட்சிகளை சாட்சியாக கொண்டு சட்டத்தின் வழி நடக்க எண்ணினாலும், சிலர் அவர்களை தடுக்கிறார்கள் என்று வேதனையடைந்ததாக கூறப்படுகிறது. புகாரை பெற்று கொண்ட காவல் அதிகாரியும், அவர்கள் புகாரை திரும்பி பெற்றதை உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்வகையான படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -