சென்னை வாழ் மக்களே., இந்த முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

சென்னையில் மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் போன்ற பல இன்னல்களை மக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் ஆற்காடு சாலை மற்றும் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் பிரதான குடிநீர் உந்து குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், இன்றும் (பிப்.7) நாளையும் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன்படி கோடம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலத்திற்கு உட்பட்ட கோயம்பேடு, கே.கே.நகர் , நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவசர தேவைக்கு https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு.., மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here