சென்னையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் நம்பிக்கை!!

0
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அசால்ட்டா இருக்காதீங்க! சுகாதாரத்துறை செயலாளர் பகீர்!!
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அசால்ட்டா இருக்காதீங்க! சுகாதாரத்துறை செயலாளர் பகீர்!!

நம் மாநிலத்தின் தலைநகரான சென்னையில், கொரோனா தொற்று குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

அதிகாரி பேட்டி :

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெல்டா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத மக்கள், பொது இடங்களுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும், முனைப்புடன் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

ஓமைக்ரான் தீவிரமாக பரவி வந்தாலும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வில்லை எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொற்று பரவல் சற்று குறைந்தாலும், மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார். இவரின் இந்த அறிவிப்பால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here