சென்னையில் அடித்து ஊற்றும் கனமழை.., புகார் தெரிவிக்க இந்த நம்பருக்கு அழையுங்கள்.., மாநகராட்சி தகவல்!!

0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பாரபட்சம் இல்லாமல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்பட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஒருங்கிணைந்துள்ளது.

மேலும் மரம் முறிந்து விழுந்தது, மின்கம்பம் சாய்ந்தது மற்றும் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட புகார்கள் பெறப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் 1913 அல்லது 044 2561 9206, 044 2561 9207,  044 2561 9208 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here