கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…..,IPL போட்டிகளை காண கூடுதல் இருக்கை….,

0
கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.....,IPL போட்டிகளை காண கூடுதல் இருக்கை....,
கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.....,IPL போட்டிகளை காண கூடுதல் இருக்கை....,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியன் மற்றும் மேல்தளத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

புதிய பெவிலியன்

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம் கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், மிகப் பழமை வாய்ந்த சென்னை சேப்பாக்கம் மைதானம் கடந்த 2011 ஆம் ஆண்டில் தான் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் சுமார் 35,000 பார்வையாளர்கள் மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கை வசதிகள் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், IPL மற்றும் உலகக்கோப்பை போன்ற போட்டிகளை காண அதிகளவு பார்வையாளர்கள் விரும்புவதால், இந்த மைதானத்தை மாற்றி அமைக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதலாக 500 பேர் அமரக்கூடிய வகையில் புதிதாக ஒரு பெவிலியன் மற்றும் மேல்தளத்தை அமைக்கும் பணிகள் கடந்த மாதங்களில் நடைபெற்றது. இந்த கட்டுமானப் பணி தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய பெவிலியன் பயன்பாட்டுக்காக திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிதடியில் அதிரடியாக வெளியான ‘அகிலன்’ ட்ரைலர்…., மாஸ் காட்டிய ஜெயம் ரவி!

அந்த வகையில், வரும் மார்ச் 17 ஆம் தேதியன்று முதல்வர் முக ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய பெவிலியனை திறந்து வைக்க இருக்கிறார். இப்போது, புதிய பெவிலியன் திறக்கப்பட்ட பிறகு, இம்மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here