
செல்லம்மா சீரியலில் மேகா தங்களின் மகள் இல்லை என்ற உண்மை தெரிந்தும் மகேந்திரன் மற்றும் லட்சுமி யாருக்கும் சொல்லாமல் மறைத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரொமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் வீட்டுக்கு வரும் மேகாவிடம் எதற்காக லட்சுமியிடம் ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கினாய் என மகேந்திரன் கோபமாக கேட்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதற்கு மேகா இதில் என்ன இருக்கிறது எனக்கு வர வேண்டிய சொத்து தானே அது என கூறுகிறார். இதை கேட்டு ஆத்திரமடைந்து லட்சுமி அப்பாவை எதுக்கு எதிர்த்து பேசுகிறாய் என கேட்டு அடிக்கிறார். அப்போது அவர் கையை பிடித்த மேகா, இதுக்கு மேல ஒரு அடி என்னை அடித்தால் நடப்பதே வேற என கூறுகிறார்.
இதை கேட்டு ஷாக்கான மகேந்திரன், பாரு லட்சுமி இவளுக்காகவா நீ இறக்கப்பட்டாய் என கூறுகிறார். இதன் பிறகு மேகாவிடம் சொத்தை லட்சுமி பெயருக்கு மாற்றி தரும்படி கூறுகிறார். அதற்கு லட்சுமியின் தம்பி, மேகா உங்க வாரிசு தானே என கூற அதற்கு மகேந்திரன் இல்லை, மேகா எங்களுடைய மகள் கிடையாது என கூறுகிறார். அதை கேட்ட மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து விடுகின்றனர். இப்படியான அனல் பறக்கும் காட்சிகளுடன் இந்த ப்ரொமோ அமைந்துள்ளது.