நாவூறும் சுவையுடன் “செட்டிநாட்டு சிக்கன் மசாலா” – ட்ரை பண்ணி பாருங்க!!

0

செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும். ஆனால், சிலருக்கு செட்டிநாட்டு உணவுகளை எப்படி வைக்க வேண்டும் என்று தெரியாது. அதற்கு முற்றுப்புள்ளியாக இன்று “செட்டிநாட்டு சிக்கன் மசாலா” ரெசிபி குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

செட்டிநாடு மசாலா தூள் தயாரிக்க
  • கொத்தமல்லி விதைகள் – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 3 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் – 2
செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய
  • சிக்கன் – 1 கிலோ
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • இலவங்கப்பட்டை -2
  • வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி & பூண்டு – 2 டீஸ்பூன்
  • தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • செட்டிநாடு மசாலா தூள் – 5 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில், இந்த ரெசிபி செய்ய தனியாக ஒரு மசாலாவை தயாரித்து வைத்து கொள்ள வேண்டும். மசாலா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் முதலில் ஒரு சட்டியில் போட்டு வறுத்து கொள்ளவும். இவை அனைத்தும் பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். பின்பு, இதனை ஆறவைத்து விட்டு அதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ட்ரைலரே அலற விட்ருக்கீங்களே கார்த்தி – சுல்தான் பட மரண மாஸ் அப்டேட்!!

இதற்கு பின்பு ஒரு சட்டியினை காய வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை ஆகியவற்றை அதனை நன்றாக வறுக்க வேண்டும். பின்பு, இதில் வெங்காயத்தினை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடைசியாக இதில் சிக்கனை போட்டு அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி முடி வைத்து விட வேண்டும். பின், ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொள்ளவேண்டும். நன்றாக கொதிக்க வைத்து விட்டு இறங்கவும். மேலே, கருவேப்பிலையை தூவி சாதத்துடனோ அல்லது ரொட்டியுடனோ சேர்த்து பரிமாறலாம். அவ்ளோ தான்!!

சூடான “செட்டிநாட்டு சிக்கன் மசாலா” தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here