தயாரிப்பாளர் ரவீந்தரின் மனைவி ஆரம்பத்தில் இப்படி தான் இருந்தாரா?? ட்ரெண்டாகும் Old கிளிக்ஸ்!!

0

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய மகாலட்சுமியின் ஒரு புகைப்படம் சோசியல் மீடியா முழுவதும் வலம் வருகிறது.

வைரல் புகைப்படம்:

சீரியல் நடிகை மகாலட்சுமி, பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை அண்மையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலானது. கடந்த 2 வாரங்களாக சமூக வலைத்தளத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களது திருமணம் குறித்த பேச்சுதான்.சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை மகாலட்சுமி.

இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று உள்ளார். மேலும் இவருக்கு ஒரு பையன் உள்ளார். இவர் சீரியல்களில், வில்லி முதல் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருடைய 2வது திருமணத்திற்கு, இவரது மகன் முழு மனதுடன் சம்மதித்தாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில், மகாலட்சுமி ரவீந்தர் தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. மேலும் ரசிகர்களும் அதை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here