சந்திரமுகி 2 படத்தில் நடந்த சில மாற்றங்கள் – உறுதியாகாத தகவலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!!

0
சந்திரமுகி 2 படத்தில் நடந்த சில மாற்றங்கள் - உறுதியாகாத தகவலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!!
சந்திரமுகி 2 படத்தில் நடந்த சில மாற்றங்கள் - உறுதியாகாத தகவலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!!

தமிழில் சக்கை போடு போட்டு வந்த திரைப்படமான சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் இத்தனை நாட்கள் வெளியான தகவலில் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

சந்திரமுகி 2

சந்திரமுகி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி 2 ஆண்டுகள் வெற்றிநடை போட்டது. முக்கிய நடிகர்கள் பலரும் இந்த படத்தில் இணைந்திருந்தனர். நயன்தாரா, ஜோதிகா, பிரபு, ரஜினி, நாசர் மற்றும் வடிவேலு போன்றோர் நடித்திருந்தனர்.

அதனால் தான் படத்திற்கு ஏக வரவேற்பு. இப்பொழுது வரை இந்த படத்தை பீட் செய்ய முடியவில்லை. இப்படி இருக்க தற்போது மீண்டும் சந்திரமுகி 2 இயக்கப்படவுள்ளது. இதனை பி.வாசு தான் இயக்குகிறார்.

சந்திரமுகி 2 படத்தில் நடந்த சில மாற்றங்கள் - உறுதியாகாத தகவலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!!
சந்திரமுகி 2 படத்தில் நடந்த சில மாற்றங்கள் – உறுதியாகாத தகவலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!!

முதல் சீசனில் நயன்தாரா மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர். அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தான் அனுஷ்காவை களமிறக்கவுள்ளனர். இதில் ரஜினி வேட்டையனாக சில காட்சிகளில் மட்டும் நடிக்க போவதாக சொல்லப்பட்டது.

ஆனால் அது இப்பொழுது சந்தேகம் தானாம். ஏனெனில் ரஜினிக்கு ஏற்கனவே அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உடல் நிலை சரியில்லாமல் போக அந்த ஷூட்டிங் இடையில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் அவர் சிறப்பு காட்சியில் நடிக்க ஒத்துக்கொள்வாரா என்பது சந்தேகம் தானாம். ஆனால் லாரன்ஸ் மற்றும் வடிவேலு இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here