ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் 2 ஆம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
‘சந்திரமுகி’ படத்தில் இடம்பெற்றிருந்த பாம்பு ஆற்றுக்குள் இறங்குவதைப் போல துவங்கும் இந்த ட்ரைலரில் கம்பீரமான ‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட’ எனும் வசனத்துடன் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் லாரன்ஸ். இந்த கதையில் லாரன்ஸ் குடும்பப் பிரச்சனையை தீர்ப்பதற்காக சந்திரமுகி அரண்மனைக்கு வருகை தர, 17 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் மீண்டும் அங்கு நடக்கிறது.
இப்போது, ‘சந்திரமுகி’ முதலாம் பாகத்தில் நடந்த சம்பவத்தை ஃப்ளாஷ்பேக் மூலம் வடிவேலு சொல்கிறார். இதற்கிடையில், ‘சந்திரமுகி 2’ ட்ரைலரில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் ராஜா சம்பந்தப்பட்ட ஃப்ளேஷ் பேக் காட்சிகள் போர் பின்னணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கீரவாணியின் மிரட்டும் இசையில் வெளியாகி இருக்கும் ‘சந்திரமுகி 2’ ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.