
பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. இப்படத்தில் வடிவேலு, கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் இப்படம் வருகிற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது சந்திரமுகி 2 படத்தின் CG, VFX பணி நிறைவு பெறாத காரணத்தால் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. செப் 15 விஷால் படம் மார்க் ஆண்டனி படம் வெளியாக இருப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.