சந்திரமுகியால வாழ்க்கையே திசை மாறிடுச்சு., என் அம்மா இதை எதிர்த்தாங்க! மனம் திறந்த பொம்மி!!

0
சந்திரமுகியால வாழ்க்கையே திசை மாறிடுச்சு., என் அம்மா இதை எதிர்த்தாங்க! மனம் திறந்த பொம்மி!!
சந்திரமுகியால வாழ்க்கையே திசை மாறிடுச்சு., என் அம்மா இதை எதிர்த்தாங்க! மனம் திறந்த பொம்மி!!

ரஜினி நடிப்பில் வெளியான, சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அந்தப் படத்தில் தான் கமிட்டான விதம் குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி பொம்மி:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் சந்திரமுகி. வசூலில் மிகப்பெரிய ஹிட் அடித்த, இந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக பொம்மி கேரக்டரில் நடித்த பிரகர்ஷிதாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. தற்போது இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் இவர் தனக்கு சந்திரமுகி படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தான் 3 வது படிக்கும் போது தனக்கு இந்த வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் தனது அம்மா, ரஜினி படமா? அப்போ நீ அதில் நடிக்க வேண்டாம் என தடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

புதுப்பேட்டை 2 : தனுஷ் போட்ட மாஸ்டர் பிளான்., ஸ்கெட்ச் கண்டிப்பா மிஸ் ஆகாது! லீக்கான அப்டேட்!!

ஏனென்றால் ஷூட்டிங் எடுத்துவிட்டு பின் அந்த காட்சியை படத்தில் காட்டாமல் போகலாம், என அவர் என்னை நடிக்க வேண்டாம் என தடுத்தார். ஆனால், இயக்குனர் பி வாசு என் அம்மாவிடம் பேசி, அவரை சம்மதிக்க வைத்தார். அதன் பிறகு அந்த படத்தில் நடித்தேன். அப்போ எனக்கு வச்ச அந்த பொம்மி பேரை இப்ப வரை கூட யாரும் மறக்கல, அந்த அளவுக்கு அந்த படம் எனக்கு ஹிட் கொடுத்தது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here