தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தற்காத்து கொள்ள மக்களுக்கு அரசு பல்வேறு அறிவுரைகளையும் அறிவித்த வண்ணம் வருகிறது. இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த போதும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐயோ.., ச்சே, உன்னை நம்புனேன் பாரு.., அர்ஜுனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த கார்த்திக்!!
அதாவது, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.