என்னது.. பச்சோந்தி மாதிரி ரோபோவா? – தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் மாஸ் கண்டுபிடிப்பு!

0
என்னது.. பச்சோந்தி மாதிரி ரோபோவா? - தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் மாஸ் கண்டுபிடிப்பு!
என்னது.. பச்சோந்தி மாதிரி ரோபோவா? - தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் மாஸ் கண்டுபிடிப்பு!

இடத்திற்கும், நிறத்திற்கும் தகுந்தாற்போல் மாறும் பச்சோந்தி போல் புதிய ரோபோ பச்சோந்தியை தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ரோபோ பச்சோந்தி:

இடத்திற்கு இடம் மாறும் மனிதர்களை பச்சோந்தி என அழைப்பார்கள். இவ்வாறு அழைப்பதற்கு காரணம், எதிரிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள எந்த பொருளின் மீது இந்த பச்சோந்தி உள்ளதோ அந்த பொருளின் நிறத்திற்கு ஏற்ப தன்னை முழுவதுமாக மாற்றிக் கொள்ளும். இதை பார்க்கும் நமக்கு இது அழகாக இருந்தாலும், அந்த உயிரினத்தை பொறுத்தவரை இது தன்னை தற்காத்து கொள்ளும் செயலாக மட்டுமே உள்ளது.

என்னது.. பச்சோந்தி மாதிரி ரோபோவா? - தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் மாஸ் கண்டுபிடிப்பு!
என்னது.. பச்சோந்தி மாதிரி ரோபோவா? – தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் மாஸ் கண்டுபிடிப்பு!

இது புதுமையான உயிரினமாக பார்க்கப்படும் வேளையில், தற்போது இது போன்ற ரோபோ ஒன்றை தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பார்ப்பவரை மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் அடைய வைத்துள்ளது. இது மட்டுமில்லாமல், தற்போது இந்த வீடியோ அதிக நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

என்னது.. பச்சோந்தி மாதிரி ரோபோவா? - தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் மாஸ் கண்டுபிடிப்பு!
என்னது.. பச்சோந்தி மாதிரி ரோபோவா? – தென்கொரிய ஆராய்ச்சியாளர்களின் மாஸ் கண்டுபிடிப்பு!

இதில் உண்மையான பச்சோந்தியின் தோல் போலவே செயற்கையான தோல் ஒன்று தயாரிக்கப்பட்டு இந்த ரோபோ பச்சோந்திக்கு போடப்பட்டுள்ளது. இதை வைத்தே இந்த ரோபோ பச்சோந்தி செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த பச்சோந்தி ரோபோக்கு பொருத்தப்பட்டுள்ள கண்களின் வழியே நிறத்தை உணர்ந்து அதற்கேற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் சிறப்பம்சங்கள் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here