இந்திய கிரிக்கெட் வீரர் ஆன யுஸ்வேந்திர சாஹல் யூடூபர் மற்றும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுடன் இன்று நடந்த நிச்சயதார்த்த போட்டோஸ்களை சமூக வலைத்தளம் ஆன ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
பிரபல யூடுபரை மணர்ந்த சாஹல்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆன யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகளை செய்துள்ளார், போட்டியின் கடினமான நிலையில் தனது பந்துவீச்சால் எதிர் அணியை மிரட்டி இந்தியா அணியை காப்பாற்றியுள்ளார். இவர் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சேர்ந்தவர் ஆவார். சாஹல் கொரோனா ஊரடங்கின் போது ஹரியானாவில் உள்ள தனது வீட்டில் மார்ச் மதம் முதல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
வெற்றி யாருக்கு !!!!!! இங்கிலாந்து – பாகிஸ்தான்
Yuzvendra Chahal reveals about his secret engagement #YuzvendraChahal @yuzi_chahal#rokaceremony pic.twitter.com/lGGZzXuqKH
— See Latest (@SeeLatest) August 8, 2020
சாஹல் முன்பு தனஸ்ரீயுடன் ஒரு சில வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார், மேலும் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் கதைகளில் தனது வேலையைப் பற்றி கூறியுள்ளார். இதற்கிடையில், தனஸ்ரீ வர்மாவும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இதே போன்ற புகைபடங்களையும் வெளியிட்டர். யுஸ்வேந்திர சாஹல் விரைவில் இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இல் விளையாடுவார். இந்த போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது, விராட் கோலியின் தலைமையின் கீழ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கான லெக் ஸ்பின்னர் ஆக இடம்பெறுவார். சாஹல் நிச்சயதார்த்திற்கு அணைத்து கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் அவர்களது வாழ்த்துக்களையும் ஆசிர்வாதத்தையும் கூறி வருகின்றனர