விவசாயிகள் மீது கார் மோதியது திட்டமிடப்பட்ட சதி செயல் – மத்திய அமைச்சர் மகன் மீது குற்றம் சுமத்தும் விசாரணை குழு!!

0

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் பேரணி நடத்திய போது,அவர்களது கூட்டத்தில் புகுந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உட்பட 17 பேர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

குற்றச்சாட்டு பதிவு :

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கூடி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து,உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி யில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் புகுந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஓட்டிவந்த கார்,அங்கிருந்தவர்கள் மீது மோதி 4 விவசாயிகள் உட்பட 8 நபர்கள் உயிரிழந்தனர்.

நாடெங்கிலும் அதிர்ச்சியை,இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,மத்திய அமைச்சர் மகன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றத்தை விசாரிக்க முக்கியமான குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையில்,அந்த சம்பவம் விபத்து அல்ல என்றும்,திட்டமிடப்பட்ட சதி செயல் எனவும் தெரிவித்துள்ளது. மேலும்,சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here