PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு திட்டம்!!

0
PUBG

PUBG உட்பட மேலும் 275 சீன செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதனால் இந்த செயலிகளும் விரைவில் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா – சீனா மோதல்:

லடாக் எல்லையில் நடந்த மோதலை தொடர்ந்து இந்தியா – சீனா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் பதிலடியாக சீனாவின் வர்த்தகத்தை இந்தியா தாக்கி வருகிறது. சீனாவின் முக்கிய செயல்பாடுகளில் அதன் செயலிகள் மற்றும் மொபைல் போன் உற்பத்தி முக்கியமான ஒன்றாகும். இதனால் இந்தியாவில் சீன செயலிகள் மற்றும் மொபைல் போன்களின் வர்த்தகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவின் 275 செயலிகள் அதிக அளவிலான ஆய்வை எதிர்கொள்ளும் மற்றும் பயனர் தனியுரிமை மீறல்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் குறித்து ஆராயப்பட உள்ளது. அதிகமான சீன இணைய நிறுவனங்கள் தடைக்கான வாய்ப்பை எதிர்கொள்கின்றன.

china apps
china apps

இந்த பட்டியலில் சீன கேமிங் நிறுவனமான டென்சென்ட் ஆதரவு PUBG, சியோமியின் ஜிலி, ஈ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸின் யுலைக் ஆகியவை அடங்கும். ஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த பயன்பாடுகளை அரசாங்கம் தடைசெய்யலாம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (மீடிஒய்) அதிகாரி ஒருவர்தெரிவித்த தகவல்கள் படி, மேலும் சீன செயலிகளுக்கு தடைகளைத் தீர்மானிப்பதற்கு முன்னர் உரிய வழிமுறைகளை அரசு பின்பற்றும் என்று கூறினார்.

இருப்பினும், இந்த செயலிகள் கடந்த மாதம் தடைசெய்யப்பட்ட 59 செயலிகளின் ‘லைட்’ பதிப்புகள் ஆகும். ஹலோ லைட், ஷேர்இட் லைட் மற்றும் பிகோ லைட் பயன்பாடுகள் கூகிள் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிப்புகள் வழியாக தடை இருந்தபோதிலும் செயலிகள் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டது. இதனால் முழுவதுமாக தடை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here