வேளாண் சட்டங்களை திரும்ப பெற இயலாது – மத்திய அரசு திட்டவட்டம்!!

0
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!

மத்திய அரசு விவசாயிகளுக்காக 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இம்மூன்று சட்டங்களும் விவசாயிகளின் வாழ்க்கைக்கு எதிராக இருப்பதால் இவற்றை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது, இருப்பினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இன்று நடத்திய அமைச்சரவை கூட்டத்தில் சட்டங்களை மற்ற வாய்ப்புக்கள் இல்லை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

மூன்று வேளாண் சட்டங்கள்:

  1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
  2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்
  3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.அதாவது மண்டி முறையை ஒழித்துக் கட்டுவதுதான் இந்த 3வது அம்சம்.  ஆனால், ஏற்கெனவே உள்ல ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் மண்டி முறை சிக்கலுக்குள்ளானால் தனியார்கள், வாணிபர்கள், கமிஷன் ஏஜெண்ட்கள் ஆகியோரே விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பார்கள்.

இப்படிபட்ட விவசாயிகளுக்கெதிரான இந்த 3 சட்டங்களையும் அகற்றக்கோரி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இரண்டு வாரமாக நடக்கும் இந்த போராட்டத்தில் இதுவரை எந்த சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இன்று மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் விவசாயிகளுக்கு ஆதரவாக முடி எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கூட்டம் குறித்து பேசும்போது வேளாண் சட்டங்களை திரும்பபெற இயலாது, வேணுமென்றால் அவற்றில் திருத்தங்கள் செய்ய பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here