தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி வரி விடுவிப்பு – மத்திய நிதி அமைச்சகம்!!

0

மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய நிதியமைச்சகம் ரூ.6,195 கோடி விடுவிப்பு அளித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி விடுவிப்பு அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசும் பல பொருளாதார சிக்கல்களை ஏதிர்கொண்டுள்ளது. பலர் வேலையிழந்த சூழ்நிலையில் பல வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. அதனால் அரசிற்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மத்திய அரசிடம் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய கோரிக்கை வைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,03,491கோடி ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டது. பொதுவாக ஜி.எஸ்.டி மதிப்பினை விட இந்த ஆண்டு 1.4% அதிகமாக ரூ1,04,963 கோடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில், பொருளாதாரத்தில் ஊரடங்கு காரணமாக மந்த நிலை நிலவியதால், முன்பு ஏப்ரலில் ரூ.32,172 கோடி, மே மாதம் ரூ.62,151 கோடி, ஜூனில் ரூ.90,917 கோடி, ஜூலையில் ரூ.87,422 கோடி, ஆகஸ்ட் மாதம் ரூ.87,422 கோடி, செப்டம்பரில் ரூ.95,480 கோடி, அக்டோபர் மாதம் மட்டும் ரூ.1,05,155 கோடி வரிவசூல் செய்யப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு இனி “நோ ஹோம் ஒர்க்”!!

தற்போது மத்திய அரசு, மாநில அரசின் நிலையை கருத்தில் கொண்டு 6-வது மாத தவணையாக தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதில், 15-வது நிதி குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் ரூ.335.41 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி அறிக்கையின்படி – மாநிலங்களின் அதிகபட்ச நிதி விவரங்கள் பின்வருமாறு,

கேரளா- ரூ.1,276.91 கோடி
இமாச்சல பிரதேஷ் – ரூ.952.58 கோடி
பஞ்சாப் -ரூ.638 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here