நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களும், மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது இதன் மூலம் ஏழை எளிய குடும்பங்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சத்தீஸ்கரில் தேர்தல் வரவுள்ள நிலையில் பல்வேறு அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது மத்திய அரசால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 80 கோடி மக்கள் பயனடைவார்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.