அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – சம்பளம் உயரப் போகுது!! எப்ப இருந்து தெரியுமா??

0
Salary
Salary

கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 17% அகவிலைப்படி தரும் மத்திய அரசு 21%-ஆக உயர்த்தி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி:

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது 24 ஆண்டுகள் இல்லாத அளவு இந்திய அரசு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையில் பிடித்தம் செய்தது. அதே போல் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்தில் அகவிலைப்படியை பிடித்தம் செய்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவந்த பின் அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதனால் மத்திய அரசின் வரிவசூல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

salary
salary

2021 ஜூன் மாதத்திற்குப் பிறகு, டி.ஏ. மூலம் அரசாங்கம் நிவாரணம் கூடுதல் அளிக்கக்கூடும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நம்பிக்கை அடைந்துள்ளனர். அப்படி நடந்தால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டும் அதிகரிக்கும்.

அமராவதி ஆற்றில் நுரை வருவதற்கு மக்கள் தான் காரணம் – அமைச்சர் பேட்டி!!

மத்திய அரசு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் டி.ஏ.-வை அதிகரிக்க உள்ளது. 7வது ஊதிய கமிஷன் அமலுக்கு வருவதால் ஊதியம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here