இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் அரசு துறைகளில் பணிபுரிய தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப மத்திய மாநில அரசு தேர்வாணையங்கள் போட்டி தேர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த சூழலில் மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் சிவில் பிரிவில் 4, பைப்பிங் பிரிவில் 4, மெக்கானிக்கல் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் 9 என மொத்தம் 17 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக். பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். அதேபோல் ஓராண்டு பணி அனுபவம் மற்றும் வயது வரம்புகளை விதித்துள்ளனர். இதற்கான விண்ணப்பம் நாளை மறுநாள் (நவ. 22) வரை recruitment.eil.co.in என்ற இணையதளத்தில் விநியோகிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.