மத்திய அரசு உரிய நிதி பங்கை தராததால், முதல்வர் போராட்டம்., ரூ.14.87 லட்சம் கோடி இழப்பு? அதிர்ச்சி அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளுக்கு உரிய நிதி பங்கீடுகளை மத்திய அரசு வழங்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கர்நாடகா மாநிலத்திற்கு உரிய நிதி பங்கீடுகளை வழங்க கோரி அம்மாநில முதல்வர் சித்தராமையா, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் காங்கிரஸ் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “மாநிலங்களின் வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் இருந்த போதிலும் உரிய வரி பங்கை மத்திய அரசு தரவில்லை. ஆண்டுதோறும் ரூ.4.30 லட்சம் கோடிக்கு மேல் வரி செலுத்தி, ஒவ்வொரு 100 ரூபாய்-க்கும் ரூ.12,13 தான் திரும்ப கிடைக்கிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14.87 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

SBI வாடிக்கையாளர்களே.., இத்திட்டத்தில் உடனே முதலீடு செய்யுங்கள்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here