நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு மத்திய அரசு கொடுத்த அங்கீகாரம் – விமான சேவை துறையில் இணைந்து சாதனை!!

0
நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு மத்திய அரசு கொடுத்த அங்கீகாரம் - விமான சேவை துறையில் இணைந்து சாதனை!!

மத்திய அரசின் ட்ரோன்களை தயாரித்து கொடுக்க, நடிகர் அஜித்தின் ஆலோசனையில் இயங்கி வரும் தக்‌ஷா குழு தேர்வாகி இருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

நடிகர் அஜித் குமார் திரைத்துறையில் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறாரோ அதே அளவுக்கு, பைக் ரேசிங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இது மட்டுமல்லாமல், அண்ணா தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் மாணவர்களின் விமான பிரிவான தக்‌ஷா குழுவின் பயிற்சியாளராகவும், ஆலோசனையாளராகவும் வழங்கி வருகிறார். இந்த நிலையில், இவர் தலைமையிலான தக்‌ஷா குழு மத்திய அரசின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா விமானம் என்று சொல்லக்கூடிய ட்ரோன்கள் தயாரிப்புக்கு தேர்வாகியுள்ளது.

இந்த குழுவோடு சேர்த்து, சென்னையை சேர்ந்த Zuppa Geo Navigation Technologies என்ற நிறுவனமும் தேர்வாகியுள்ளது. இந்த ட்ரோன்கள் உதிரி பாகம் தயாரிப்புக்கு 9 நிறுவனங்களும், ட்ரோன் விமானம் தயாரிப்புக்கு 5 நிறுவனங்களும் தேர்வாகியுள்ளது. நடிகர் அஜித் பயிற்சி அளிக்கும் தக்‌ஷா குழு , மத்திய அரசின் ட்ரோன் தயாரிப்புக்கு தேர்வாகி இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here