1 ரூபா கூட பீஸ் இல்ல., உங்க குழந்தையையும் தனியார் பள்ளியில் சேர்க்கலாம்! அரசின் சூப்பர் திட்டம்!!

0
1 ரூபா கூட பீஸ் இல்ல., உங்க குழந்தையையும் தனியார் பள்ளியில் சேர்க்கலாம்! அரசின் சூப்பர் திட்டம்!!
1 ரூபா கூட பீஸ் இல்ல., உங்க குழந்தையையும் தனியார் பள்ளியில் சேர்க்கலாம்! அரசின் சூப்பர் திட்டம்!!

ஏழை, எளிய பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை, சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், இலவச கட்டணத்தில் படிக்க வைப்பதற்கான முழு விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளது.

முழு விவரங்கள்:

பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின் தங்கியோர், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க ஆசைப்படுவார்கள். ஆனால் இங்குள்ள கட்டணத்தை நினைத்து பார்த்து, பலர் இந்த கனவை கை விடுவதுண்டு. அந்த வகையில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மூலம் ஏழை, எளியோரும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்காக மத்திய அரசின், RTE என்ற இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 20 முதல் ஏப்ரல் 20 வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கியோருக்கான தகுந்த சான்று, வருமானச் வரிச் சான்று, குழந்தையின் ஜாதி சான்று ஆதார் சான்று பிறப்புச் சான்று மற்றும் இருப்பிட சான்று போன்றவற்றோடு, ரேஷன் கார்டு விவரங்களையும் அளிக்க வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் https://rte.tnschools.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் சென்று, தகவல்களை நிரப்பி, ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும். மேற்கொண்டு தகவல்கள் பெற விரும்பினால் 14417 என்ற Toll free நம்பரையும் தொடர்பு கொள்ளலாம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் முழு செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும். நீங்கள் LKG முதல் 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில், இலவச கட்டணத்தில் படிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here