
உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி, விருது விழா உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் நகர்ப்புறங்களில் எழுச்சி அடைந்து வருவது போல் கிராமப்புறங்களிலும் பெண்கள் தங்களுக்கான அதிகாரங்களை புரிந்து செயல்பட வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பெண்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி கிரிராஜ் கூறுகையில், “கிராமப்புற பெண்களின் சேமிப்பு பழக்கத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியாக தகுந்த அந்தஸ்துகளை பெற வேண்டும். இதனால் நாடு முழுவதும் சுமார் 86 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் பயன்பெற்று வரும் 9 கோடி உறுப்பினர்களையும் லட்சாதிபதி ஆக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கமாகும். எனவே இத்திட்டத்தை மேம்படுத்த ரூ.6.26 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் பங்கு பெற்றுள்ள பெண்கள் சிறு, குறு தொழில் உட்பட பல்வேறு உற்பத்தி நிறுவனங்களையும் குழுவாக ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.