முன்பை விட மிக வேகமாக பரவும் கொரோனா தொற்று – மத்திய அரசு அளித்த சூப்பர் அட்வைஸ்!!

0

கேரளாவில் கடந்த சில நாட்களாக கட்டுங்கடங்காமல் கொரோனா தொற்று பரவி வருகிறது. அதுவும் அம்மாநிலத்தில் ஒரே நாளில் 32, 000ஐ கடந்து தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. மாநில அரசு எடுத்த முயற்சிகளால் சில வாரங்களுக்கு முன் இந்த நோய் தோற்று ஓரளவுக்கு குறைந்தது. ஆனால் ஓணம் பண்டிகையால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இதனால் கேரளாவில் மீண்டும் பழையபடி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதேபோல் மஹாராஷ்டிராவிலும் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அடுக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த  5 அடுக்கு தடுப்பு நடவடிக்கையின் கீழ் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக சென்று கண்காணித்தல், தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துதல்  உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here