வாரே வா., வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்.., மத்திய பட்ஜெட் 2023ல் குவிய போகும் அறிவிப்புகள்!

0

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான, மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் பொது மக்களிடையே எழுந்துள்ளது. அதாவது மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி விலக்கை ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்துதல், தனிநபர் மற்றும் கல்வி கடன் போன்றவற்றில் சலுகை போன்ற பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில், சுங்கவரி கட்டணத்தின் வழிமுறைகளை எளிமைப்படுத்தவும், இதுபோன்ற சுங்க வரி சார்ந்த வழக்குகளில் பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதுவரை, நிலுவையில் உள்ள பல வழக்குகள் நிரந்தரமாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு., ஜன.27ல் கிடைக்கும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இதே போல் மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக, ஏற்றுமதி வீதத்தை அதிகரித்து, புதிய தயாரிப்புகளுக்கான திட்டத்தை மேம்படுத்த ஊக்கத்தொகைகளை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதுபோன்ற அறிவிப்புகளால் மத்திய பட்ஜெட் மீது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here