பான் – ஆதார் எண் இணைப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

0

ஆதாருடன் பான் எண் இணைப்புக்கு அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை இணைக்கலாம் என மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருவதால் வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு நீட்டித்து வருகிறது. இந்நிலையில் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த ஆண்டின் மார்ச் 31 வரையிலும், பின்னர் ஜூன் 31 வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் வழிமுறைகள்..!

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் ‘Link Aadhaar’ பிரிவில் ஆதார் எண் பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம். மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN SPACE 12 digit Aadhaar SPACE 10 digit PAN என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here