பொது மக்கள் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயமா? மத்திய அரசு கொடுத்த தெளிவான விளக்கம்!!

0
பொது மக்கள் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயமா? மத்திய அரசு கொடுத்த தெளிவான விளக்கம்!!
பொது மக்கள் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயமா? மத்திய அரசு கொடுத்த தெளிவான விளக்கம்!!

பொதுமக்கள் விமான பயணத்தின் போது மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றும், ஆனால் அதனை உபயோகிப்பது மற்றவர்களுக்கும் பாதுகாப்பு தான் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மீண்டும் மாஸ்க்:

கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகின் பல நாடுகளுக்கும் பரவிய இந்த வைரஸ், லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. தற்போது இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருப்பதால், உலக நாடுகளில் இந்த வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தப் பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பொதுமக்கள் விமானம், ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

17 வயது சிறுவனின் உயிரை கடவுள் போல் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.,, ஆச்சரியமான சம்பவம்!!

இந்த நிலையில் தொற்று பரவல், தற்போது குறைந்துள்ளதால் விமான பயணத்தில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என அரசு அறிவித்துள்ளது. இருந்தாலும் மற்ற நபர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாஸ்க் பயன்படுத்துவது சிறந்தது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here