இந்தியாவை மீட்டெடுக்க 5 லட்சத்து 3 ஆயிரம் கோடி கடன் வாங்க போறோம் – மத்திய அரசு தகவல்!!

0
வெறும் 5 ஆண்டுகளில் உங்க கையில் ரூ.5 லட்சம் - மத்திய அரசின் அதிரடி திட்டம்! முழு விவரங்கள் உள்ளே!!

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், இன்னும் சில தேவைகளுக்காகவும் கிட்டத்தட்ட 5.03 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கடன்:

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வருவாய் இழப்பை ஈடுகட்டவும்  நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் கடன் பெற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு வழங்க பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையின் பாக்கியை வழங்குவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.  இந்த காரணங்களுக்காக கிட்டத்தட்ட 5 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை கடன் தொகையாக பெற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here