தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு – கழிவறை முதல் கணினி வரை

0
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின் போது கணக்கீட்டாளர்கள் மக்களிடம் அவரவர் வீட்டிலுள்ள கழிவறை, மொபைல் எண், சொந்த வண்டி உள்ளிட்ட பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.

31 வகையான கேள்விகள்

இந்த ஆண்டு கணக்கெடுப்பின் பொது மக்களிடம் 31 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு அவையும் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவுள்ளன.
அந்த கேள்விகளில் சில,
வீட்டில் கழிவறை உள்ளதா?
வீட்டில் சொந்த வண்டி உள்ளதா?
மொபைல் எண், ஸ்மார்ட்போன்
குடிக்கும் நீர் எங்கிருந்து பெறப்படுகிறது
வீட்டின் தலைவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவரா
வீட்டில் உள்ளவர்களின்
விபரங்கள் மற்றும் பாலினம்
வீட்டின் வகை, எண் மற்றும் தளம் குறித்து
லேப்டாப், கணினி குறித்த விபரங்கள்

போன்ற கேள்விகள் கேட்கப்படவுள்ளன.

இது மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மட்டுமே எனவும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என மக்கள் தொகை ஆணையர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here