சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு?? நீதிமன்றத்தின் தீர்ப்பு இது தான்!!

0

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த மனுவினை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்பிடி ஏற்க முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு:

மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் மூலமாக நாட்டின் மொத்த மக்கள் தொகை அறியப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலமாக தான் மக்களுக்கான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த கணக்கெடுப்பின் போது மக்களின் அனைத்து விதமான அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த இந்த கணக்கெடுப்பு அடுத்து ஆண்டு நடைபெற இருக்கின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கணக்கெடுப்பினை சாதிவாரியாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் பாபு மனு ஒன்றை வழங்கியிருந்தார். அதில், கூறப்பட்டிருந்தாவது, “அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடைபெற வேண்டும். இதன் மூலமாக தான் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும்” இவ்வாறாக அந்த மனுவில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் சாதிவாரியாக ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பினை எடுக்க வேண்டும் என்று மனுதாரரான ஆனந்த் பாபுவிடம் கேட்டனர். அதற்கு அவர் இட ஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்தார். இவரது இந்த பதிலிற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பினை சாதிவாரியாக எடுக்க முடியாது என்று கூறினார்.

6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

இதற்கு மனுதாரர் தரப்பில் இருந்து கூறியதாவது, “இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் நடைமுறை இருந்தது. அதனால் மீண்டும் இந்தியாவில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பினை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதே போல் பல்வேறு தரப்பினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இட ஒதிக்கீட்டினை வலியுறுத்தி போராட்டங்கள் கூட நடத்துகின்றனர்” இவ்வாறாக தெரிவித்திருந்தார். இதனை நிராகரித்த நீதிபதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை என்று கூறி இந்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here