பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த பொய்யான செய்தியை நம்ப வேண்டாம்? எச்சரிக்கை செய்த CBSE!!!

0
பொதுத்தேர்வு மாணவர்களே., இந்த பொய்யான செய்தியை நம்ப வேண்டாம்? எச்சரிக்கை செய்த CBSE!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை மறுநாள் (பிப்ரவரி 15) முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து  10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அட்டவணையில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விபத்து., அவரே வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

அதாவது பொதுத் தேர்வை சுமுகமாகவும் நியாயமாகவும் நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு விதமான வதந்திகள், கடந்த காலங்களை போல் பரப்பப்பட வாய்ப்புள்ளது. அதுபோன்ற போலியான படங்கள், வீடியோக்களை பொதுமக்கள் நம்பாமல், [email protected] என்ற CBSE-க்கு மின்னஞ்சல் ஐடி-க்கு விரைந்து புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here