Thursday, June 24, 2021

இனி தேவேந்திரகுல சமூகம் பெயரில் சாதி சான்றிதழ் – தமிழக அரசு உத்தரவு!!

Must Read

தமிழகத்தில் தேவேந்திரகுல சமூகத்தின் உட்பிரிவிற்கு இருக்கும் சமூகத்தினர் தங்களுக்கு தேவேந்திர வேளாளர் என்று ஒரே பெயரில் சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவேந்திரகுல சமூகம்:

தற்போது சான்றிதழ் அனைத்து வகையான இடஒதுக்கீட்டிற்கு ஓர் முக்கிய பங்காக இருந்து வருகிறது. இதனால் பல சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பயனடையும் வகையில் பல கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து வருகின்றனர். தற்போது அதே போல் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் பட்டியல் சமூகத்தின் பள்ளர், குடும்பன், தேவேந்திர குலத்தான், காலாடி, கடையன் உள்ளிட்ட 6 உட்பிரிவுகளை ஒன்றாக இணைக்கப்பட்ட ஓர் சமூகம்.

இவர்கள் பட்டியல் சமூத்தவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் இடஒதுக்கீடு போன்றவற்றை பெற்று வரும் நிலையில் இந்த சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து தற்போது இந்த சமூகத்தினருக்கு தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் சாதி சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள், அதிகாரம் பெற்ற அதிகாரிகள் போன்றவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -