கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை படிப்படியாக நெருங்கும் காஸ்பர் ரூட்.., அரையிறுதியில் அசத்தல் வெற்றி!!

0
கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை படிப்படியாக நெருங்கும் காஸ்பர் ரூட்.., அரையிறுதியில் அசத்தல் வெற்றி!!
கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை படிப்படியாக நெருங்கும் காஸ்பர் ரூட்.., அரையிறுதியில் அசத்தல் வெற்றி!!

நார்வே வீரர் காஸ்பர் ரூட், ரஷ்ய வீரரை வீழ்த்தியதன் மூலம் இந்த ஆண்டு தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்!!

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிரசித்தி பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கான ஆட்டத்தில் கேஸ்பர் ரூட், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவை எதிர்கொண்டார். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஸ்பர் மூன்றாவது செட்டை மட்டும் தவறவிட்டு 7-6 (7-5), 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்க வீரர் பிரான் செஸ்டியாபோவுடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய ஸ்பெயின் வீரர் 6 – 7 (6-8), 6 – 3, 6 – 1, 6 – 7 (5-7), 6 – 3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் பிரான் செஸ்டியாபோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் கேஸ்பர் ரூட் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோத உள்ளனர். இதே போன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டத்தில் ஒன்ஸ் ஜபேரும், ஸ்வியாடெக்கும் மோதிக்கொள்கின்றனர். இதில் ஸ்வியாடெக் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here