இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – தொடரும் பரபரப்பு!!

0

அதிமுக கட்சியில் சட்டபேரவை தேர்தலின் முடிவுகள் வெளிவந்த பின்பு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்:

தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளில் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி செய்யும் வாய்ப்பினை தவறவிட்டது. 75 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரை முடிவு செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது, முதற்கட்டமாக கடந்த 7ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அன்றைய கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை. பின்பு தமிழகத்தில் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வந்தது. ஆனால் ஊரடங்கிற்கு நடுவில் 10ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று கூறி போலீசாரிடம் மனு வழங்கப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

திமுகாவிற்கு மாற போகும் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள்!!!

இன்னும் 3 தினங்களில் கல்யாண ஏற்பாடுகளை ஆரவாரத்துடன் செய்யும் மனோகர் – பேரதிர்ச்சியில் சக்தி!!

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாமல் கட்சி தொண்டர்களும் அலுவலகத்திற்கு முன்பு குவிந்தனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது இதனை தொடர்ந்து பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உட்பட 250 பேர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here