சென்னை டென்னிஸ் தொடரில் முக்கிய மாற்றம்.., வீராங்கனைகள் திடீர் ஓய்வு.., காரணம் என்ன??

0
சென்னை டென்னிஸ் தொடரில் முக்கிய மாற்றம்.., வீராங்கனைகள் திடீர் ஓய்வு.., காரணம் என்ன??
சென்னை டென்னிஸ் தொடரில் முக்கிய மாற்றம்.., வீராங்கனைகள் திடீர் ஓய்வு.., காரணம் என்ன??

டபிள்யுடிஏ 250 சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து முக்கிய வீராங்கனைகளாக கரோலின் கார்சியா, எலிஸ் மெர்டென்ஸ் ஆகியோர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்னிஸ் தொடர்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12 முதல் 18 வரை முதல் முறையாக பெண்கள் டபிள்யுடிஏ 250 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த டென்னிஸ் தொடருக்கு இந்திய வீராங்கனைகள் உட்பட, சர்வதேச வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த வீராங்கனைகள் அனைவருக்கும் தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் பிரான்ஸின் கரோலின் கார்சியா நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்நிலையில் அவரின் பயணம் திட்டமிட்டபடி அமையாத காரணத்தால் டபிள்யுடிஏ டென்னிஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார். இவரை தொடர்ந்து பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸின் முழங்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து தமிழக மக்களுக்கு மற்றொரு விருந்து.., சென்னையில் அரங்கேறும் சர்வதேச போட்டி!!!

இதனால் அவரால், சென்னை ஓபனில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் தகுதி சுற்று ஆட்டத்தில் நைட்டோ மற்றும் லட்சுமி பிரபா, எஸ்.பாவி செட்டி மற்றும் கே. ஒகாமுரா, எஸ். லான்சரே மற்றும் டி.விஸ்மனே, என். ஹிபினோ மற்றும் எஸ்.சாமர்த்தி ஆகிய வீராங்கனைகள் மோதி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் நபர் இறுதி போட்டிக்குள் நுழைவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here