இமாச்சலுக்கு சுற்றுலா சென்ற  சைதை துரைசாமி MLA மகன் மாயம்., தேடும் பணியில் போலீசார் தீவிரம்!!

0
இமாச்சலுக்கு சுற்றுலா சென்ற  சைதை துரைசாமி MLA மகன் மாயம்., தேடும் பணியில் போலீசார் தீவிரம்!!

சென்னையின் முன்னாள் மேயரும், அதிமுக கட்சியின் MLA வாக பணியாற்றியவர் தான் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றித் துறை சாமி இமாச்சல பிரதேசத்திற்கு தனது நண்பர் கோபிநாத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இமாச்சலில் உள்ள மலை பாங்கான பகுதியில் காரில் பயணம் செய்துள்ளார். மேலும் சட்லஜ் நதியின் நதியின் அருகே இருந்த நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  அதோடு அவர்களின் கார் சாலையில் இருந்து சட்லஜ் நதியில் கவிழ்ந்து விழுந்துள்ளதாம்.

அந்த சம்பவ இடத்திலேயே காரின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். மேலும் கோபிநாத் படுகாயம் அடைந்துள்ளார்.  இந்த விபத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதையடுத்து ஓட்டுனரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, கோபிநாத்தை‌ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் வெற்றி துரைசாமி சட்லஜ் நதியில் மாயமாகியுள்ளார். அவரது உடல்  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.  மேலும் அவரை தேடும் பணியில் மீட்பு பணியினர் விரைந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here